search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவின் பட்நாயக்"

    ஒடிசா மாநில முதல்வர் நவின் பட்நாயக் தங்கள் மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். #Odisha #NaveenPatnaik #specialcategorystatus

    புவனேஷ்வர்:

    தெலங்கானா தனி மாநிலமாக பிறிக்கப்பட்ட போது ஆந்திரப்பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் இதனை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. இந்த காரணத்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். 

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பாஜக உடனான கூட்டணியை சமீபத்தில் முறித்துக்கொண்டது. 
     
    ஆந்திரா மாநிலத்திற்கு இன்னும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத நிலையில்,  தற்போது ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
     
    அந்த கடிதத்தில், இந்தியாவில் மிகவும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. இங்குள்ள மக்கள்தொகையில், எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினரே பெரும்பான்மையாக உள்ளனர். மேலும், இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் மாநிலமாகவும் ஒடிசா உள்ளது. மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #Odisha #NaveenPatnaik #specialcategorystatus
    ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக், ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். #NaveenPatnaik #PMModi #NotifyHockeyNationalGame

    புவனேஷ்வர்:

    இந்தியாவின் தேசிய விளையாட்டாக அனைவராலும் அறியப்படுவது ஹாக்கியாகும். ஆனால் அதற்கான அறிவிப்புகள் இதுவரையில் அரசு இதழில் வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில், ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அவர் எழுதிய கடிதத்தில், அடுத்த ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் வருகிற  நவம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டு என அனைவராலும் அறியப்படும் ஹாக்கி விளையாட்டு, தேசிய விளையாட்டு என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது அறிந்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.



    நீங்கள் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஹாக்கி ரசிகர்கள் மனநிலையை புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன். எனவே ஹாக்கிக்கு நமது தேசிய விளையாட்டாகும் தகுதி உள்ளது. இந்தியாவை உலகளவில் பெருமைப்பட செய்த ஹாக்கி வீரர்களுக்கு அது ஒரு சிறந்த மரியாதையாக இருக்கும். மேலும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் நவின் பட்நாயக் கூறியுள்ளார். #NaveenPatnaik #PMModi #NotifyHockeyNationalGame
    ×